எம்.எல்.ஏவுக்கு கொலை மிரட்டல்

ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு மக்களை தலிபான்கள் கொடுமைப்படுத்தி வருகின்றனர் என தனது முகநூலில் ஒரு பதிவை போட்டார் கேரள முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த சட்டமன்ற உறுப்பினருமான எம்.கே முனீர். இதனையடுத்து, அவரது பதிவை 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும். இல்லையெனில், அவரும் அவரது குடும்பத்தினரும் கொலை செய்யப்படுவார்கள் என ஒரு மிரட்டல் கடிதம் அவருக்கு வந்துள்ளது. அக்கடிதத்தில் ‘தலிபான் ஒரு வியப்பு’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.