முதல்வருக்கு கொலை மிரட்டல்

தெலுங்கானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய அசாம் மாநில முதல்வர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “முகலாய ஆட்சியாளர்களைப் போல, பாபர், நிஜாம்கள், ஒவைசியின் பெயர்களும் விரைவில் மறக்கப்படும். ஔரங்கசீப், ஓவைசி இருவருக்கும் நம் வரலாற்றில் இடம் இல்லாத பாரதத்தை உருவாக்குவோம்” என்றார். இதனையடுத்து, அகமது அலி என்ற முஸ்லீம் நபர், ‘முகலாய வரலாறு முடிவடைவதற்குள் முதலமைச்சரை முடிப்பேன் (கொல்வேன்)’ என்று அசாமி மொழியில் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டார். அவரின் இக்கருத்துக்கு எதிராக, பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பு அந்த நபர் மீது காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளது. அவரை உடனடியாக கைது செய்து விசாரிக்க அதில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.