‘காங்கிரஸ் இல்லாத பா,ஜ,க இல்லாத ஒரு அணியை உருவாக்க சிலர் முயற்சிக்கிறார்கள். அப்படிப்பட்ட முயற்ச்சிக்கு தி.மு.க துணை போகக்கூடாது. காங்கிரஸ் இல்லாத அணியை அமைத்தால் அது பா.ஜ.கவுக்கு சாதகமாகிவிடும்’ என திருமாவளவன் கூறினார். இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்த பா.ஜ.க செய்தி தொடர்பாளரும் மூத்த தலைவருமான நாராயணன் திருப்பதி, ‘இந்த பேச்சிலிருந்து மூன்று விஷயங்கள் தெளிவாகிறது. 1. காங்கிரஸ் – தி.மு.க உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. 2. திருமாவளவனுக்கு பா.ஜ.கவின் வளர்ச்சியை கண்டு அச்சம் அதிகரித்துள்ளது. 3. பா.ஜ.க வளர்வதை தடுக்க, ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவிக்க துணை நின்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டணியே முக்கியம். அதாவது தமிழினத்தை விட அரசியல் அதிகாரமும் ஆதிக்கமுமே முக்கியம் என்ற நிலைப்பாட்டில் திருமாவளவன் உள்ளார். தமிழா! தமிழா! இதுவல்லவோ தமிழின துரோகம்?’ என கூறியுள்ளார். இதற்கு வி.சி.க கட்சியின் நிர்வாகி கருணாகரன் என்பவர், வி.சி.க நினைத்தால் பா.ஜ.க தமிழகத்தில் நடமாடவே முடியாது. நாராயணனை வீடு புகுந்து வாயில் வெட்டுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தமிழக முதல்வரும் காவல்துறை தலைவரும் இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்களா அல்லது வழக்கம் போல பா.ஜ.க மீது பாய்வார்களா? என நாராயணன் திருப்பதி கேட்டுள்ளார்.