நதியைத்தேடி

புராண நதியான சரஸ்வதியைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர் தர்ஷன் லால் ஜெயின். ஆர்.எஸ்.எஸ் மூத்த உறுப்பினரான இவர், சமூகப் பணிகளுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். ஹரியானாவில் பல கல்வி நிறுவனங்களை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். ஏழைகளின் வாழ்க்கை தரம், பெண் குழந்தைகள் கல்வி என பல்வேறு துறைகளில் அயராது உழைத்தார். ஜகத்ரியில் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியை நிறுவினார். டி.ஏ.வி பெண்கள் கல்லூரி நிறுவன செயலாளர், சரஸ்வதி ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் உள்ளிட்ட பல சமூகப் பணிகளில் ஈடுபட்டார். இவரது அயராத பங்களிப்பிற்காக கடந்த 2019ல் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. இவர் கடந்த திங்கட்கிழமை(8/2/2021) அன்று தனது இல்லத்தில் காலமானார். ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்ட தலைவர்கள் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.