கேரள இந்துக்களால் மறக்க முடியாத ஆண்டு 1921. முஸ்லீம் பயங்கரவாதிகளால் கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான ஹிந்து இனப்படுகொலை மலபாரில் அரங்கேற்றப்பட்டது. ‘மாப்ளா கலவரம்’ என அழைக்கப்படும் இந்த வன்முறையில், ஆயிரக்கண ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர், கோவில்கள் அழிக்கப்பட்டன, பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர், கட்டாய மதமாற்றம் நடைபெற்றது, பலர் அகதிகள் ஆக்கப்பட்டனர். அவர்களின் சொத்துகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இந்த கொடூரமான நிகழ்வு நடந்து 100 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இதில் இறந்த அப்பாவி ஹிந்துக்களுக்கு கடந்த அகஸ்ட் 8ம் தேதி ‘பாலி தர்ப்பணம்’ செய்யப்பட்டது. இதில் பல ஹிந்துக்கள் கலந்துகொண்டு தர்பணம் செய்தனர். ‘பாலி தர்ப்பணம்’ செய்ய முடியாதவர்கள் விளக்கேற்றி பிரார்த்தனை செய்தனர். மாப்ளா கலவரத்தில் ஈடுபட்ட பல முஸ்லீம் வெறியர்கள், அவர்களுக்கு துணை போனவர்கள், மறைமுகமாக ஆதரித்தவர்கள் என பலர், வரலாற்றுத் திரிப்பின் காரணமாக இன்று சுதந்திரப் போராட்ட வீரர்களாக கொண்டாடப்படுகின்றனர் என்பது வேதனையான விஷயம்.