ஆபத்தான கருத்து

கேரளாவில் ஒருவர், கொரோனா சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற்றிருப்பதை நீக்க வேண்டும் என கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். அதில் அவர், பாரதத்தில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களின் அடிப்பகுதியில் பிரதமர் மோடியின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. அந்தச் சான்றிதழின் தனது தனிப்பட்ட உரிமை என்பதால், அதில் பிரதமரின் புகைப்படத்தை அகற்ற வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி ரூபாய், நாணயத்தில் மகாத்மா காந்தியின் உருவப்படம் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், பிரதமர் மோடியின் புகைப்படம் எந்த சட்ட விதிகளின்படியும் ஒட்டப்படவில்லை என்று வாதிட்டார். இதனை விசாரித்த நீதிபதி, இது ‘மிகவும் ஆபத்தான கருத்து’. இதேபோல நாளை யாராவது இங்கு வந்து நான் மகாத்மா காந்தியை விரும்பவில்லை எனவே, அவரது புகைப்படத்தை நீக்க வேண்டும் என போராட்டம் நடத்தலாம் என கூறினார். இவ்வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசு தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதால், வழக்கை நவம்பர் 23ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.