மட்டமான பிரச்சார யுக்தி

தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது முதல் பொதுமக்களுக்கு குறிப்பாக பெரும்பான்மையான ஹிந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கோயில் கும்பாபிஷேகம், கோயில் நிலங்கள் மீட்பு என விளம்பரப்படுத்திக்கொள்ளும் தி.மு.க அரசு, மறுபுறம் ஏராளமான கோயில்கள் இடிப்பு, ஹிந்துக்களின் உரிமை பறிப்பு என அவர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது. இதனால், விழிப்படைந்து வரும் பெரும்பான்மை ஹிந்துக்களின் வாக்குகள் எங்கே தனது கட்சிக்கு கிடைகாமல் போய்விடுமோ என்ற பயத்தில் சில மட்டமான பிரச்சாரங்களை தி.மு.கவினர் முன்னெடுத்துள்ளனர்.

அதில் ஒன்றாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் தி.மு.கவின் சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியை எப்போது நிறைவேற்றுவீர்கள் என பொதுமக்கள் உதயநிதி ஸ்டாலின் உட்பட தி.மு.க தலைவர்களிடம் நேரடியாகவே கேட்டு வருகின்றனர். இதனால், வேறுவழியின்றி விரைவில் அத்திட்டம் செயல்படுத்தப்படும் என ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் வழங்குவதற்கான விண்ணப்பம் என்று சொல்லி, போலியாக ஒரு விண்ணப்பத்தை அச்சடித்து பொதுமக்களுக்கு விநியோகித்து வருகின்றனர் தி.மு.கவினர். மேலும், இந்த விண்ணப்பத்தை ரேஷன் கடை ஊழியர்களிடம் கொடுத்து, பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய அன்புக் கட்டளையிட்டுள்ளனர்.

அடுத்ததாக, சினிமா துணை நடிகர்களுக்கு பிராமணர்கள் போல வேடமிட்டு அவர்களை கொண்டு தி.மு.க பிரச்சார நோட்டீஸ்கள் மக்களிடம் வினியோகிக்கப்படுகின்றன. இதில் ஒரு சிலர் அன்னியன் படத்தில்கூட இதே வேடத்தில் நடித்தவர்கள் என்பதை அப்பகுதி மக்களே உறுதிப்படுத்தியுள்ளனர்.