விவசாய போராட்டத்தில் விரிசல்

பாரதிய கிசான் யூனியன் தேசிய தலைவர் பானு பிரதாப் சிங் தனது அறிக்கையில், ‘மத்திய அரசால் இயற்றப்பட்ட புதிய விவசாய சட்டங்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதனை நடைமுறைப்படுத்த ஒரு விவசாயிகள் ஆணையம் இருக்க வேண்டும். இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தும் ராகேஷ் திகாயத், மாநில எல்லையில் பயங்கரவாதத்தை பரப்புகிறார், அவர் 100 சதவீதம் ஊழல் செய்பவர். அவர் தனது வசதிக்காக இலக்குகளை மாற்றிவருகிறார்’ என தெரிவித்தார். மேலும், சமூக விரோதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஊடுருவியது, குடியரசு தினத்தில் கலவரத்தில் ஈடுபட்டது, பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு விவசாயிகளை அழைத்தும் அவர்கள் அதனை தவிர்த்தது, போராட்டக் களத்தில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்தது, யோகேந்திர யாதவ் இது குறித்து வாய் திறக்காமல் இருப்பது குறித்தும் அவர் பேசியுள்ளார்.