கோவேக்சின் அபாரம்

கோவேக்சின் தடுப்பூசி குறித்து ஆய்வு செய்த அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் (என்.ஐ.எச்.) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களிடம் இருந்து ரத்த சீரம் மாதிரிகளைப் பெற்று 2 ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதன் முடிவுகள் இந்த தடுப்பூசி நோய் எதிர்ப்பு பொருளை உருவாக்குகிறது. ஆல்பா மற்றும் டெல்டா வகை வைரஸ்களுக்கு எதிராக செயல்படுகிறது. கோவேக்சின் ‘சார்ஸ் கோவ் 2′ வைரசின் முடக்கப்பட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது. அதனால் இதை நகல் எடுக்க முடியாது. ஆனால் வைரசுக்கு எதிராக நோயெதிர்ப்பு பொருளை உருவாக்க நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது. இந்த தடுப்பூசி பாதுகாப்பானது. இந்த தடுப்பூசியின் வெளியிடப்படாத 3வது கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள், இது நோய்க்கு எதிராக 78 சதவீத செயல்திறனை கொண்டுள்ளது. மருத்துவமனையில் சேர்ப்பது உள்ளிட்ட கடுமையான கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 100 சதவீத செயல்திறனை கொண்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.