கோவாக்சின் பூஸ்டர் ஆய்வு

உயிரியல் அறிவியலுக்கான திறந்த அணுகல் அமைப்பான ‘பயோ ஆர்.எக்ஸ்.ஐ.வி’ (bioRxiv) நிகழ்த்திய ஆய்வில், கோவாக்சின் இரண்டாவது மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் கொரோனாவின் டெல்டா மாறுபாடு தொற்றுக்கு எதிரான செயல்திறனை மேம்படுத்தும் மற்றும் கொரோனாவின் ஓமிக்ரானின் இரண்டு வகை மாறுபாடுகளுக்கு எதிராகவும் பாதுகாப்பைக் கொடுக்கும் என்று தெரியவந்துள்ளது. நோயாளியின் ஆன்டிபாடி, மருத்துவ தகவல்கள், வைரஸ் சுமை குறைப்பு, வைரஸ் தாக்கத்துக்குப் பிறகான நுரையீரல் நோயின் தீவிரம் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவற்றிலும் கோவாக்சின் சிறப்பாக செயல்பட்டதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கோவாக்சின் தடுப்பூசி பாரதத்தில் முழுமையாக உருவாக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட்  நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய கோவாக்ஸின் 3 ஆம் கட்ட முடிவுகள், கொரோனாவைத் தடுப்பதில் 81 சதவீத இடைக்கால தடுப்பூசி செயல்திறனைக் வெளிப்படுத்தியுள்ளது.