ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போதுள்ள ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜே.எம்.எம், காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆதரவுடன் கிறிஸ்தவ மிஷனரிகள் அங்கு தொடர்ந்து மிக வேகமாக மத மாற்றங்களை செய்து வருகின்றன. இது குறித்த பொதுமக்களின் புகார்கள் எவ்வித விசாரணையுமின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளன. கிறிஸ்தவ மிஷனரிகள், அங்குள்ள சிறிய நகரங்கள், கிராமங்களை குறிவைத்து செயல்படுகிறார்கள். ஏழ்மையில் உள்ளவர்கள், குறிப்பாக பழங்குடியின பட்டியலினத்தவரை ஏமாற்றி, ஆசைகாட்டி, மிரட்டி மதம் மாற்றுகிறார்கள். மதம் மாறவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்கிறார்கள். மதம் மாறாதவர்கள் ஊரைவிட்டு தள்ளி வைக்கப்படுகின்றனர். மாடு மேய்ப்பவர்களை மதம் மாற்றி அவர்களையே மாட்டிறைச்சி உண்ணவைத்து கொடுமைப்படுத்துகின்றனர். இதுகுறித்து ஹிந்து, சமண, பௌத்த, சீக்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள் புகார் அளித்தாலும் விசாரணை நடைபெறுவதில்லை என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதனை அம்மாநில பா.ஜ.க வினரும், வி.ஹெச்.பி உள்ளிட்ட ஹிந்து அமைப்பினரும் கடுமையாக எச்சரித்து வருகின்றனர். மதமாற்றத்தைத் தடுக்க பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.