சர்ச்சைக்குரிய அரசின் ட்வீட்

பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்ற பெயரில், பாரத அரசிற்கு எதிராக எப்போதும் பேசியும் எழுதியும் வருபவர் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் அருந்ததி ராய். அவர் எழுதிய ‘காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்’ என்ற புத்தகம், பாரத அரசின் குடிமக்கள் ஈடுபாடு (citizen engagement platform of the Government of India) என்ற மத்திய அரசின் டுவிட்டரில் விளம்பரம் செய்யப்பட்டது. அந்த புத்தகத்தை குறித்து 20 சொற்களின் புத்தக சுருக்கத்தை கூறும் சவால் விடுக்கப்பட்டது. மேலும், அந்த டுவீட்டில் எட்மண்ட் வில்சன் எழுதிய “ஒரே புத்தகத்தை இரண்டு நபர்களும் இதுவரை படிக்கவில்லை”.என்ற ஒரு மேற்கோளும் பதிவிடப்பட்டது. இதற்கு பல நெட்டிசன்களும் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர். அதனையடுத்து உடனடியாக அந்த ட்வீட் நீக்கப்பட்டது.