டுவிட்டரின் சர்ச்சை செயல்பாடுகள்

உலகெங்கிலும் அந்தந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகள், சட்டத்தை மதிக்காத செயல்பாடுகள்,  இடதுசாரி, பயங்கரவாத சிந்தனை என சர்ச்சையை தூண்டுவதில் முன்னிலையில் இருப்பது டுவிட்டர். அவ்வகையில், தற்போது ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியாக தன்னை அறிவித்துக்கொண்ட அம்ருல்லா சலேவின் கட்சி, ஆப்கானிஸ்தான் கிரீன் ட்ரெண்ட் (@AfgGreenTrend) மற்றும் சலேவின் அலுவலகம் (@AfghPresident) கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் முடக்கிவிட்டது. ஆனால், மற்ற தலிபான்களின் டுவிட்டர் கணக்குகளை முடக்காமல் அப்படியே வைத்துள்ளது. இது இணையதளங்களில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘இது வெட்கக்கேடான நடவடிக்கை, பாரபட்சமான செயல், பயங்கரவாதிகளை டுவிட்டர் ஆதரிக்கிறது,…’ என டுவிட்டரின் நடவடிக்கை குறித்து சமூக ஊடக பயனாளிகள் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.