இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘கோவையில் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி அனைத்து முஸ்லிம் ஜமாத்துகளும் ஒன்றிணைந்து ஒரு போராட்டம் செய்ய முடிவெடுத்துள்ளன. அதன் மூலம் ஒரு கலவரத்தை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளனர். கோவையில் நடைபெற்ற பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் பலர் இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளனர். காஷ்மீர் ஃபைல்ஸ் திரப்படம் ஓடும் திரையரங்குகளை முற்றுகையிடுவதாக முஸ்லிம் அமைப்புகள் கூறியுள்ளன. முடிந்துபோன, நீதிமன்றத்தில் உள்ள ஹிஜாப் பிரச்சனையை இவர்கள் மீண்டும் கிளறுகிறார்கள், அதனை பெரிதாக்க முயற்சிக்கின்றனர். ஹிந்துக்கள் கோயில்களில் சென்று குரான் கொடுக்கின்றனர். இதுபோன்ற வகைகளில் எப்படியாவது கோவையில் பெரிய கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இதுபோன்ற செயல்களை காவல்துறை தடுக்க வேண்டும் என கோருகிறோம். இந்த பிரச்சனைகள் சம்பந்தமாக கோவை மாவட்ட காவல்துறை ஆணையரை சந்தித்து இந்து முன்னணி சார்பில் மனு அளித்துள்ளோம்’ என கூறினார்.