ஓட்டு வங்கி அரசியலுக்காக, பாரதத்தில் அனைத்து மாநிலங்களிலும் ஒற்றுமையாக இருப்பதுபோல காணப்பட்டாலும் கேரளாவில் காங்கிரசுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் என்றும் ஏழாம் பொருத்தம்தன். இந்நிலையில், பா.ஜ.க அங்கு வளர்வதை பொறுத்துக்கொள்ள முடியாத காங்கிரஸ் அங்கு கம்யூனிச கட்சியின் ஆதரவை கேட்டுள்ளது இரு கட்சியின் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கேரள மாநிலத் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், மஞ்சேஸ்வர் தொகுதியில் நிற்கும் பா.ஜ.க தலைவர் கே. சுரேந்திரனை தோற்கடிக்க சி.பி.எம் ஆதரவைக் கோரியுள்ளார். இதற்கு முஸ்லிம் அடிப்படைவாத கட்சியான எஸ்.டி.பி.ஐ ஆதரவு தெரிவித்துள்ளது.