மத்திய அரசு, நாட்டுக்கு எந்த நல்லது செய்தாலும் அதனை குறைகூறுவது, திரித்து பேசுவது அல்லது அதை பற்றி பொய் கருத்துகளை வெளியிடுவது என மட்டுமே செயல்படும் கட்சி காங்கிரஸ். அது பா.ஜ.கவை எதிர்கட்சி என கருதாமல் எதிரிக் கட்சியாகவே பாவித்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் மத்திய அரசை காங்கிரஸ் பாரட்டிய சம்பவம், அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வயநாடுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மலப்புரம் கருளை டவுனில் பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அம்பலப்பாடி வலம்புரம் கொட்டன்பாறை சாலையை திறந்து வைத்தார். இது குறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கேரளாவின் வளர்ச்சியை நோக்கிய பயணத்தில், இது மேலும் ஒரு மைல் கல்லை சேர்த்துள்ளது. பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அம்பலப்பாடி வலம்புரம் கொட்டன்பாறை சாலையை, கருளை டவுன், கருளை கிராம பஞ்சாயத்து, நிலம்பூர் எல்.ஏ.சி., மலப்புரத்தில் ராகுல்காந்தி திறந்து வைத்தார்” என பதிவிடப்பட்டது. முன்னதாக, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “கேரள எம்.பி ராகுல் காந்தி பெரும்பாலும் செல்லாத அவரது தொகுதியான வயநாட்டிலும் கூட, நரேந்திர மோடி அரசின் திட்டங்கள் மற்றும் நிதியினால் மட்டுமே வளர்ச்சிப் பணிகள் நடக்கின்றன” என தெரிவித்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.