பயங்கரவாதத்தை மறைக்கும் காங்கிரஸ்

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு குற்றவாளியான ஷாரிக் என்ற பயங்கரவாதிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதத் தொடர்புகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது அவனது பல பயங்கரவாத செயல்கள், அவனிடம் கைப்பற்றப்பட்ட ஜிஹாதி குறிப்புகள், தமிழகம், கேரளா என நாடு முழுவதும் உள்ள அவனது தொடர்புகள் குறித்த பல்வேறு செய்திகள் வெளிவந்துகொண்டுள்ளன. இந்த சூழலில், இது குறித்து பேசிய கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.சிவக்குமார், இதனை மூடி மறைக்கும் விதத்தில் பேசியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து அவர் பேசுகையில், “குண்டுவெடிப்பு தவறுதலாக நடந்திருக்கலாம். ஷாரிக்கின் இந்த செயல் புல்வாமா அல்லது மும்பை பயங்கரவாதத் தாக்குதல் போன்ற பெரிய விஷயமல்ல. எந்த விசாரணையும் இல்லாமல் ஒருவரை எப்படி தீவிரவாதி என்று கூற முடியும், யார் பயங்கரவாதிகள், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, விசாரணை இல்லாமல் எப்படி ஒருவரை பயங்கரவாதி என்று அழைப்பது? இது மும்பை, டெல்லி, புல்வாமாவில் நடந்தது போன்ற பயங்கரவாத செயலா?இதில் ஒன்றுமேயில்லை.சில தோழர்கள் சில தவறுகளைச் செய்திருக்கலாம்.அதை வேறு கோணத்தில் முன்வைக்க உங்களுக்கு எப்படி உரிமை இருக்கிறது?அவர்கள் அதை வாக்குகளுக்காக செய்தார்கள்.அவர்கள் வாக்குகளைத் திருட விரும்பினர் அவ்வளவு தான்.பா.ஜ.க அரசால் வாக்காளர்களுக்குக் வெளிக்காட்டுவதற்கு குறிப்பிடத்தக்க சாதனைக்கள் என்று எதுவும் இல்லை.எனவே, இந்த குண்டுவெடிப்பைப் பெரிதாகக் காட்டி வாக்குகளைத் திருட நினைக்கிறது அரசு” என கூறியுள்ளார்.பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் எஸ்.பிரகாஷ், காங்கிரஸ் கட்சித் தலைவரின் இந்த கருத்தை கடுமையாக சாடினார்.சிவகுமார் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பயங்கரவாதிகளைக் காப்பாற்ற முயற்சிப்பது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.முன்னதாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபாலகிருஷ்ண காந்தி, 2015ல் பயங்கரவாதக் குற்றவாளி யாகூப் மேமனை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற முயன்றார்.1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளியின் கருணை மனுவை பரிசீலுக்குமாறு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியிருந்தார். பாகிஸ்தானில் புகுந்து பயங்கரவாதிகளை கொன்ற நமது இந்திய ராணுவத்தின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து சந்தேகம் எழுப்பியவர்களும் இதே காங்கிரஸ்காரர்கள் தான் என்பது நினைவு கூரத்தக்கது.