ராஜஸ்தானின் கோட்டாவில் ‘பாப்புலர் பிரண்ட் டே’ கொண்டாட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) என்ற பயங்கரவாத அமைப்புக்கு அனுமதி வழங்கியுள்ளது ஆளும் காங்கிரஸ் அரசு.
கர்நாடகா ஹிஜாப் பிரச்சனையின் பின்னணியில் இருப்பது பி.எப்.ஐ, மாணவர் பிரிவான சி.எப்.ஐ, மற்றும் அதன் அரசியல் கட்சியான எஸ்.டி.பி.ஐ என்பது வெளியாகியுள்ளது. தடை செய்யப்பட்ட சிமி என்ற பயங்கரவாத அமைப்பினர்தான் பி.எப்.ஐயின் பின்னணியில் உள்ளனர். பி.எப்.ஐ அதன் தேச விரோத நடவடிக்கைகளுக்காக புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பில் உள்ளது.
சி.ஏ.ஏ வன்முறை போராட்டம், ஹத்ராஸ் விவகாரம், கர்நாடக பட்டியலின காங்கிரஸ் எம்.எல்.ஏ வீடு எரிப்பு, பெங்களூரு வன்முறை உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகள்,, ஆர்.எஸ்.எஸ் உட்பட பல ஹிந்து அமைப்பினர், பா.ஜ.க தலைவர்கள் கொலைகளின் பின்னணியில் உள்ளதும் இந்த அமைப்புதான்.
இதைத்தவிர, ஆள் கடத்தல், போதை மருந்து கடத்தல், ஆயுதக் கடத்தல், தங்கக் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் பி.எப்.ஐ அமைப்பினர் மீது உள்ளது. இது குறித்து தெரிந்திருந்தும் காங்கிரஸ் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதேபோல தமிழகத்திலும் குடியரசு தினத்தன்று பி.எப்.ஐ நிர்வாகிக்கு மதுரையில் ஆட்சியர் விருது வழங்கியுள்ளார். இவை, பி.எப்.ஐ அமைப்பின் பின்னணியை கோடிட்டுக் காட்டுகிறது.