பிரதமர் மோடி வாழ்த்து

இசை உலகின் உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 2022ம் ஆண்டுக்கான 64வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்தது. இவ்விழாவில்,  சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்பத்திற்கான கிராமி விருதை, ‘எ கலர்புல் வோர்ல்டு’ ஆல்பத்திற்காக இந்திய அமெரிக்க பாடகி பால்குனி ஷா பெற்றார். இதனையடுத்து கிராமி விருது வென்ற பால்குனி ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘கிராமி விழாவில் சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்பத்திற்கான விருதை வென்ற பால்குனி ஷாவிற்கு வாழ்த்துகள். எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.