முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் வரும் ஆயக்கட்டு பகுதிகளில் 527 இடங்களில் தண்ணீர் திருடப்படுவதாக தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் கூறியுள்ளார். இதற்கு, பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், விவசாயிகள் சார்பில், பாரதிய கிசான் சங்க மாநில பொதுச் செயலர் பார்த்தசாரதியும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், ‘விவசாயத்திற்காக தண்ணீரை உறிஞ்சுவதை திருட்டு என சொல்வது தவறு. மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் தேவையை பற்றி யோசிக்கும் தமிழக அரசு, அவர்களுக்கு உணவு வழங்கும் விவசாயத் துறையின் தேவையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அடிப்படை நீர் ஆதாரத்திற்கு தீர்வு காண வேண்டும். அமைச்சர் இதை ஆராய வேண்டும்’ என்றார்.