புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விடுத்துள்ள அறிக்கையில், ‘தமிழக அரசே மது விற்பனையில் ஈடுபட்டதில் இருந்து லட்சக்கணக்கான குடும்பங்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. டாஸ்மாக்கால் பள்ளி மாணவர்கள் முதல் அனைத்து வயதினருமே மது பழக்கத்துக்கு ஆளாகிவிட்டனர். கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெற மது காரணமாகிறது. குஜராத்தைப் போல தமிழகத்தில் தனிநபர் வருமானம் ஏன் உயரவில்லை? என்றால், ‘இது திராவிட மாடல்’ என்கிறார் நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன். தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தை மதுபான விலையை ஏற்றி திரும்ப எடுத்துக்கொள்கின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு, ரூ. 1,000 முதல், 5,000 வரை வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்றார்கள். ஆனால் இப்பது பூரண மதுவிலக்கை கொண்டுவராமல், மதுபான விலையை உயர்த்திவிட்டனர். முழு மதுவிலக்கை அமல்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைவோம்’ என்றுதெரிவித்துள்ளார்.