ஜாகீர் உசேன் மீது புகார்

தமிழக பரத நாட்டிய கலைஞரும் தி.க, தி.மு.க தீவிர ஆதரவாளருமான ஜாகீர் உசேன், ஹிந்துக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே தமிழ்நாடு கலை பண்பாட்டு துறையின் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராக நியமனம் செய்யப்பட்டார். இசை பள்ளிக்கு ஜாகீர் உசேன் ஆய்வுக்கு சென்றபோது பெண் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து அந்த ஆசிரியை தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை இயக்குனர் காந்திக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ஜாகீர் உசேன், ஆசிரியையிடம் அநாகரீகமாக நடந்துகொண்டது, ஆசிரியைகளை தரக்குறைவாக பேசியது குறித்து பட்டியலிட்டுள்ள அவர், இச்சம்பவம் மனதை வேதனைப்படுத்தியது. அதனால், தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியது என்று தனது மனக் குமுறலை வெளியிட்டுள்ளார். முன்னதாக, இதேபோல சிவகங்கை மாவட்ட இசை பள்ளிக்கு ஆய்வுக்கு வந்த போது பெண் ஆசிரியையிடம் அத்துமீறி ஜாகீர் உசேன் நடந்து கொண்டதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை ஆசிரியர்கள், ஊழியர்கள் பேரவை மாநில பொதுச்செயலர் அய்யனார், ‘ஜாகீர் உசேன் பல மாவட்டங்களில் பெண் ஆசிரியைகளிடம் பாலியல் ரீதியாக பேசி இருக்கிறார். பெண்கள் மட்டும் பங்கேற்கும் நடன பயிலரங்கம் ஏப்ரலில் நடக்கிறது. இம்முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இப்பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.