உத்தர பிரதேசமுதல்வர் யோகி ஆதித்யநாத், தங்கள் மாநிலத்தில் ஆக்சிஜன்தட்டுப்பாடு இல்லை, அப்படி யாராவது பொய்யான செய்தி பரப்பினால் அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்திருந்தார். இதுதொடர்பாக நடிகர் சித்தார்த் தனது ட்விட்டரில் யோகி ஆதித்திய நாத்தை ஒரு மாநில முதல்வர், பலர் வணங்கும் ஒரு துறவி என பாராமல் கீழ்தரமாக விமர்சித்திருந்தார். அவரது இந்த கருத்துக்கு பொதுமக்கள், பா.ஜ.க தொண்டர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க நிர்வாகி ஆனந்தன் என்பவர், உ.பி. முதல்வரை குறித்து தரக்குறைவாகவும் அவதூறாகவும் பேசிய நடிகர் சித்தார்த் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். உ.பி முதல்வரை மிரட்டும் வகையில் சித்தார்த் கருத்து உள்ளது, இது பயங்கரவாத செயலை தூண்டுகிறது’ என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.