கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி, திருநெல்வேலியில் நடந்த ஒரு அரசியல் கூட்ட மேடையில் பேச்சாளர் நெல்லை கண்ணன், ஹிந்துக்களை கோயிலுக்கு போகிற நாய்கள் எனவும், காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடம், பாரம்பரிய நாளிதழான தினமலர் அதன் நிர்வாகம், எழுத்தாளர்கள் என அனைவரையும் கொச்சையாகவும் அவதூறாகவும் பேசினார். மேலும் பெண்களை ஆபாசமாக பேசிய அவர், நீதிமன்றம், நீதிபதிகள், நீதிமன்ற நடவடிக்கைகள் என அனைத்தையும் கேலி செய்துள்ளார். சமூக நல்லிணக்கத்தை குலைக்கவும் முயற்சித்தார். எனவே, அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நெல்லை பிரிவு சார்பில் காவல்துறையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாரத பிரதமர், உள்துறை அமைச்சரை கொலை செய்வேன் என்று கூறியது, அவதூறு பரப்பியது என நெல்லை கண்ணன் மீது cr no 423/19 U/s 504,505(1)(b) 505(2) IPC.என்ற எண் கொண்ட வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இவ்வழக்கில், இது போன்று நான் இனி பேசமாட்டேன் என்று பிணையில் இவர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தகது.