‘கத்தோலிக்க மிஷன் சொசைட்டி பார் ட்ரைபல் எஜுகேஷன்’ (பழங்குடியினரின் கல்விக்கான கத்தோலிக்க மிஷனரி அமைப்பு) 4.05 கோடி ரூபாயை வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக பெற்று சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதாக எப்.சி.ஆர்.ஏ விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (எல்.ஆர்.ஓ) குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிறுவனம், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ‘மனோஸ் யுனிதாஸ் என்ற மற்றொரு தன்னார்வ அமைப்பின் பிரதிநிதி (ப்ராக்ஸ்ஸி) போல செயல்படுகிறது. தற்போதைய கொரானா பெருந்தொற்று பரவலினால் ஏற்படும் வறுமையை காரணமாக்கி, மதம் மாற்றம் செய்ய முயற்சிக்கிறது. மேலும் இத்தகைய குழந்தைகளின் புகைப்படங்களை சர்வதேச அளவில் விற்று பணமாக்குகிறது என குற்றம் சாட்டியுள்ள எல்.ஆர்.ஓ, இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகத்திற்கும், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கும் கடிதம் எழுதியுள்ளது. இதற்கு பதிலளித்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் ப்ரியன்க் காணூங்கோ, இதை குறித்து ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.