கம்யூனிச கொலையாளிகள்

கேரளாவின் தலசேரியை சேர்ந்த நாளிதழ் விற்பனையாளர் முகமது பாசில். இவர் ஆரம்பத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். பின்னர் முஸ்லிம் பயங்கரவாத ஆதரவு அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவில் இணைந்தார். கடந்த 2006 அக்டோபர் 22 அன்று தலசேரி மசூதி அருகே மர்ம நபர்கள், முகமது பாசிலை கொலை செய்தனர். இவ்வழக்கை முதலில் மாநில குற்றப்பிரிவு காவல்துறையும் பின்னர் 2008ல் சி.பி.ஐயும் விசாரித்தது. இவ்வழக்கில் 2012ம் ஆண்டில் 2 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த 2016ல் கேரள காவல்துறையினர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீது பொய்யாக குற்றம் சாட்டினர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிர்வாகி சுபேஷ் என்பவரையும் கைது செய்தனர். இவ்வழக்கில் தற்போது கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ அறிக்கை தாக்கல் செய்தது. அதில், ‘முகமது பாசில் கொலை வழக்கில் மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் காரை ராஜன், காரை சந்திரசேகரன் ஆகியோருக்கு தொடர்புள்ளது. அவர்களின் உத்தரவின்படி, கொடி மணியும் அவரது அடியாட்களும் முகமது பாசிலை கொலை செய்தனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.