யோகி ஆதித்யநாத் கருத்து

உ.பி.சட்டப்பேரவையில் முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘தலிபான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சிலர் பேசுகின்றனர். ஆப்கானிஸ்தானில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக தலிபான் பயங்கரவாதிகள் கொடுமைகள் இழைக்கின்றனர். போராட்டம் நடத்தும் சொந்த நாட்டு மக்களையே தலிபான்கள் சுட்டுக் கொல்கின்றனர். ஆனால், இங்கே சிலர் வெட்கமே இல்லாமல் தலிபான் பயங்கரவாதிகளை ஆதரிக்கின்றனர். அப்படி ஆதரிப்பவர்களின் முகத்திரையை கிழிக்கவேண்டும். அவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார்.