ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கருத்து

பாரதத்தில் உள்ள மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. அவரது குடும்பத்தினருடைய சொத்தின் மதிப்பு மட்டும் ரூ. 22,300 கோடி. முலீட்டுத்துறை விற்பன்னரான இவர், கடந்த ஜூன் மாதம் சி.என்.பி.சி டிவி 18க்கு அளித்த பேட்டியில், ‘தயவுசெய்து யாரும் அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் முதலீடு செய்யாதீர்கள். நமது வீட்டில் உணவு நன்றாக இருக்கும்போது, நாம் ​​ஏன் வெளியில் சாப்பிட வேண்டும்? பாரதத்தை நம்புங்கள், இங்கேயே முதலீடு செய்யுங்கள். பாரதத்தின் வளர்ச்சி குறித்து நான் மிகவும் உற்சாகமாகவும், நேர்மறையாகவும் கருதுகிறேன். பாரதப் பொருளாதாரம் ஆரோக்கியமான வளர்ச்சியைக் காணப் போகிறது. பொருளாதாரம் தற்போது டேக் ஆஃப் கட்டத்தில் உள்ளது. நாம் ஜன் தன் வங்கிக் கணக்கு, என்.பி.ஏ, ஐ.பி.சி, ரேரா, சுரங்கம், தொழிலாளர் சட்ட சீர்திருத்தம், விவசாயச் சட்ட சீர்திருத்தங்கள் போன்ற பல நேர்மறையான மாற்றங்களைச் சந்தித்துள்ளோம். பாரதம் நீண்ட, நல்ல பொருளாதார வளர்ச்சியின் பாதையில் உள்ளது. பாரதப் பொருளாதாரத்தில் நிகழும் கட்டமைப்பு மாற்றங்கள் முன்னேற்றப்பாதையில் உள்ளன’ என தெரிவித்தார். கடந்த அக்டோபர் 5ம் தேதி டெல்லியில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவை சந்தித்த பிரதமர் மோடி, அவரின் கருத்தை பாராட்டினார்.