கோயில் நிலத்தில் கல்லூரி

‘பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நேரு மெட்ரோ ரயில் நிலையம் அருகில், சீனிவாச பெருமாள் கோயிலுக்கு சொந்தமாக 50 ஆயிரம் சதுர அடி இடம் இருக்கிறது. அந்த இடத்தில், வணிக வளாகம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டங்களுக்கு வரும் ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தங்குவதற்கான விடுதிகள் கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். ஆக்கிரமிப்புகளை ஒரு வாரத்தில் அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 50 கிரவுண்டு நிலத்தில் தனியாரால் நடத்தப்பட்டு வந்த பள்ளி, கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது ஹிந்து சமய அறநிலையத் துறையே இப்பள்ளியை நடத்த முன்வந்துள்ளது. அந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகளின் வசதிக்காக, புதிய நவீன கல்லூரி கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்’ என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோயில் நிலத்தில் இதுபோல கட்டப்படும் பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்கள் ஹிந்து அற நிலையத்துறையால் நிர்வகிக்கப்படுமா அல்லது லயோலா கல்லூரி போல தங்களக்கு வேண்டியவர்களுக்கும் மாற்று மதத்தவர்களுக்கும் தாரை வார்க்கப்படுமா என்பதையும் அமைச்சர் தெளிவுபடுத்தினால் நல்லது என ஹிந்து பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.