தி.மு.கவுக்கு கூட்டணியினர் எதிர்ப்பு

தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசு அறிமுகப்படுத்திய ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்திற்கு தி.மு.கவின் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட்டுகள், தி.க வீரமணி உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணமாக அவர்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கல்விக் கொள்கையை திணிக்கும் திட்டம், சங் பரிவார் கும்பல் ஊடுருவி விடும் என இதற்கு பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

தி.மு.க எந்த திட்டத்தையும் சுயமாக சிந்தித்து செயல்படுத்தாது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். மத்திய அரசு, முந்தைய அ.தி.மு.க அரசு திட்டங்களுக்கு தி.மு.கவின் ஸ்டிக்கர் ஒட்டுவதும், மற்ற மாநிலங்களின் திட்டங்களை காப்பி அடிப்பதுமே அதன் வழக்கம். இதற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன. அவ்வகையில், இத்திட்டமும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை அமைப்புகளான சேவாபாரதி, வனவாசி கல்யாண் ஆஸ்ரமம் போன்றவை பல்லாண்டுகளாக நடத்தி வரும் இலவச டியூஷன், ஒர் ஆசிரியர் பள்ளி, கிராமங்களில் படித்த மாணவர்களை கொண்டு கற்பித்தல் முறை போன்ற திட்டங்களின் நகல் என்பதும் மத்திய அரசின் திட்டத்தின் பெயர் மாற்றமே தி.மு,.க அரசின் இத்திட்டமும் என்பதே மக்களின் கருத்து. எனினும், மக்களுக்கு உதவும் நல்ல திட்டம், ஊழல் இல்லாத நேர்மையான திட்டம் என்றால் ஆதரிப்பதுதான் முறை.

சரி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் நுழைந்துவிடும் என்ற இவர்கள் வாதப்படி பார்த்தால், தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள கிறிஸ்தவ பள்ளிகளில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான ஹிந்து குழந்தைகள் படிக்கின்றனர். அப்பள்ளிகளில் கிறிஸ்தவ ஆசிரியர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கிறித்தவத்தை குழந்தைகளிடம் திணிக்கவில்லையா, முஸ்லிம்கள் நடத்தும் மதரசாக்களில் என்ன கற்பிக்கப்படுகிறது?

ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்பான வித்யா பாரதி தேசமெங்கும் நடத்தும் பள்ளிகளிலும் மாற்றுமத குழந்தைகள் படிக்கின்றனர். ஆனால், அங்கு இதுபோன்ற மதத் திணிப்புகள் ஏதும் நடைபெறுவது இல்லையே. அங்கு அனைத்தும் நேர்மையாக, வெளிப்படையாகத்தானே நடைபெறுகிறது? அப்படி இருக்கையில், ஆர்.எஸ்.எஸ், அதன் துணை அமைப்புகள் மீது வீண்பழி சுமத்துவது எதனால்? இதேபோன்று இவர்களால் தைரியமாக கிறிஸ்தவ முஸ்லிம் பள்ளிகள் மீது தைரியமாக பழி சுமத்த முடியுமா?