திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி சேனாபதிபாளையத்தில் கொங்கலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து எவ்வித அனுமதியும் இன்றி சிலர் சர்ச் கட்டி வருகின்றனர். ஏற்கனவே, அரசு நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்டே ஹிந்து கோவில் அருகே சர்ச் கட்டி சமூக பதற்றத்தை உருவாக்குதல், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சர்ச் நிர்வாகத்தின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி, சர்ச் கட்டும் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கடந்த 2020 மார்ச் 10ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சர்ச் கட்டுமான பணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். தற்போது அவர்கள் மீண்டும் கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளனர். எனவே இந்த பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் ராஜகோபாலன், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளார்.