மேற்கு வங்கத்தில் 1976ல் ‘ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் முழுமையான மாற்றத்தை விரும்பும் ஒரு நீதி தேடும் கிறிஸ்தவர்களின் கூட்டாண்மை அமைப்பு’ என கூறிக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது ‘ஜதியோ கிறிஸ்டியோ புரோச்சார் சமிதி’ (JKPS) எனும் கிறிஸ்தவ தன்னார்வ அமைப்பு. இவ்வமைப்பு, சமீபத்தில் வெளிநாட்டு நிதியை பெற்றதில் ரூ. 42.31 கோடிகள் அளவிற்கு முறைகேடு செய்துள்ளதாகவும், இந்த எப்.சி.ஆர்.ஏ விதிமீறல் குற்றச்சாட்டை உள்துறை அமைச்சகம் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் சட்ட உரிமைகள் ஆய்வகம் அமைப்பு (எல்.ஆர்.ஓ) கோரிக்கையை முன்வைத்துள்ளது.