கேரளாவுக்கு ஆதரவாக சீனா

கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிபுரியும் சிறிய மாநிலமான கேரளாவில், பாரதத்திலேயே அதிகமான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு எனும் வகையில் அங்கு கொரோனா தலைவிரித்து ஆடுகிறது. நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கொரோனா பாதிப்புகள் அங்கு பதிவாகின்றன. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 70 சதவீதம். கேரள முதல்வர் பினராயி விஜயன், முஸ்லிம்களை திருப்திப்படுத்த பக்ரீத் பண்டிகையின்போது, கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மூன்று நாட்கள் முழு விலக்கு அளித்தார். இதனால், அந்நிகழ்வு கொரோனா சூப்பர் ஸ்பிரெட்டராக மாறியது. இதற்காக கேரள அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்தது. இந்நிலையில், பிரபல செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் ஆகஸ்ட் 26ல் வெளியிட்ட ‘இந்தியா மற்றும் மோடியின் அரசிற்கான கேரளாவின் கோவிட் – 19 பாடங்கள்’ என்ற கட்டுரையில், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கேரளா சிறப்பாக செயல்பட்டதாகவும் அதிகமான பரிசோதனைகளை மேற்கொண்ட்தாகவும் கூறி வெகுவாக பாராட்டியது. எனினும் இது குறித்த விமர்சனங்களால் அப்பதிவை ராய்ட்டர்ஸ் நீக்கிவிட்டது. கம்யூனிச நாடான சீனாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனமான ஹூவை (Huawei) இக்கட்டுரைக்கு நிதியுதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.