கொரோனா தாக்கம் குறித்து இங்கிலாந்தில் ‘ஸோ கோவிட் ஸ்டடி ஸ்மார்ட் போன் செயலி’மூலம், 5 முதல் 17 வயதுள்ள சிறுவர், சிறுமிகள் 25 ஆயிரம் பேரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை ‘தி லான்செட் சைல்டு அண்ட் அடல்சன்ட்’ பத்திரிகை வெளியிட்டது. அதன்படி, ‘நீண்ட கால கொரோனா அறிகுறிகளை அனுபவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஒரு சில குழந்தைகள் மட்டுமே, நீண்ட கால பாதிப்புகளை அனுபவிக்கின்றன. சில பெரியவர்கள் நீடித்த நோய் பாதிப்பை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு 4 வாரங்களோ அதற்கும் கூடுதலாகவே அறிகுறிகள் தொடரும். கொரோனா பரிசோதனையில் ‘நெகட்டிவ்’ முடிவு வந்தபின்னரும் குழந்தைகள் சளி, காய்ச்சலால் அவதிப்படலாம். எனினும் குழந்தைகள் சராசரியாக 6 நாளில் கொரோனாவில் இருந்து குணம் அடைகின்றனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.