ஹலாலை ஆதரிக்கும் முதல்வர்

உணவு முறையில் மத பாரபட்சம் காட்டும் முஸ்லிம்களின் ஹலால் முறை தற்போது உலகெங்கும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இது பாரதத்திலும் எதிரொலிக்கிறது. முஸ்லீம் சமையல்காரர்கள் உணவை ஹலால் செய்வதாகக்கூறி அதில் எச்சில் துப்புவது மற்ற மதத்தவர்களின் எதிர்ப்புக்கு ஆளானது. இது சம்பந்தப்பட்ட வீடியோக்கள், வாக்குமூலங்கள் சமீபகாலமாக சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இதனால், பொதுமக்கள் தற்போது ஹலால் அறிவிப்பு பலகை கொண்ட ஹோட்டல்களைத் தவிர்கின்றனர். தங்களது உணவக வியாபாரத்தில் பின்னடைவைச் சந்தித்த முஸ்லிம் உணவகங்கள் ஹலால் அடையாளப் பலகைகளை அகற்றி வருகின்றன. இந்நிலையில், கேரளாவில் முஸ்லிம் சமூகத்தை திருப்திப்படுத்த ஓட்டு வங்கி அரசியல் செய்யும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் பினராயி விஜயன், ஹலால் முறையை பகிரங்கமாக ஆதரித்து பேசி வருகிறார். ‘சில அமைப்புகள் மதத்தை உணவில் கலக்கின்றன’ என குற்றம் சாட்டிய அவர், ‘ஹலால் என்றால் உண்ணக்கூடிய பொருள் மட்டுமே’ என ஹலால் முறையை ஆதரித்து பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு கேரளாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.