முன்னாள் எம்.பி மீது வழக்குப் பதிவு

ஹரியானா மாநிலம் குருகிராமில், சமீபகாலமாக முஸ்லிம்கள் வேண்டுமென்றே சாலை, மைதானங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தொழுகை நடத்துவது தொடர்பான அங்கு பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன. இதனையடுத்து உள்ளூர் ஹிந்து ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது அதீப் மற்றும் சிலர் மீது காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மக்களை தவறாக வழிநடத்துதல், மத நல்லிணக்கத்தை சீர்குலைத்தல், நிலத்தை அபகரிக்க முயற்சி, கலவரத்திற்கு வழிவகுத்தல் ஆகிய பிரிவுகளில் அதில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அதீப், தனக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தனக்குத் தெரியாது என்றும், அது பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டதாகவும் கூறினார்.