பாரத சீன எல்லைப்பகுதியில் இருந்த ஆளில்லா பங்கர்களை சேதப்படுத்த முயன்ற சீன ராணுவ வீரர்களின் முயற்சியை நமது பாரத ராணுவத்தினர் வெற்றிகரமாக முறியடித்ததோடு சுமார் 200 சீன ராணுவ வீரர்களை தற்காலிகமாக சிறைப்பிடித்து வைத்தனர். இதில் நமது பாதுகாப்புப் படைக்கு எந்த வித சேதமும் ஏற்படவில்லை. பிறகு அந்தப் பகுதி ராணுவ கமாண்டர்கள் மட்ட பேச்சுவார்த்தையில் விவகாரம் சுமுகமாக தீர்க்கப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், விரைவில் நடைபெறவுள்ள பாரதம் சீனாவின் 13ம் சுற்று கார்ப்ஸ் கமாண்டர் மட்ட பேச்சுவார்த்தைகளில் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் மேலும் படைகளை வாபஸ் பெறுவது குறித்து சுமூக முடிவு எட்டப்படும் என தெரிகிறது.