ஹிந்துக்களுக்கு எதிரான பிரச்சாரம்

தீபாவளி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி என வந்துவிட்டாலே ஹிந்து பண்டிகைக்கு எதிரான விளம்பரங்கள் எல்லாம் சமூக நலன், சுற்றுசூழல் என்ற பெயரில் வரிசைகட்டி வர ஆரம்பித்துவிடும். அவ்வகையில், ஃபேப் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், சியட் டயர், டாபர் என பல விளம்பரங்கள் வெளியாகியுள்ளன. இவை பலத்த கண்டனங்களுக்கும் ஆளாகின. அவ்வகையில், பெப்பர் ஃபிரை என்ற பர்னிச்சர் விற்பனை நிறுவனம் அதன் விளம்பரத்தில், ‘பட்டாசுகளை மறந்துவிடுங்கள், இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டை அற்புதமான உணவுகள், விளையாட்டுகள் மற்றும் அழகான பர்னிச்சர்களால் பிரகாசமாக்குங்கள்’ என கூறியுள்ளது. இதற்கு இணையதளவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், ‘இது பர்னிச்சர் கடையை மறக்க வேண்டிய நேரம்’ என கூறியிருந்தார். ஆம், உண்மைதான். சீன பட்டாசுகளை தவிர்த்த்து போலவே நாம், இதுபோன்ற விளம்பரம் வெளியிடும் நிறுவனங்களையும் புறக்கணித்தால் போதும், தானாக வழிக்கு வந்துவிடுவார்கள். பட்டாசு சத்தம் அதிகரிக்கட்டும், இவர்களின் சத்தங்கள் அடங்கட்டும்.