புல்டோசர் பாபா புல்டோசர் மாமா

உத்தரப்பிரதேசத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பவர் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத். குற்றவாளிகளால் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டிடங்களை அவரது அரசு புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளுவதால் யோகி ஆதித்யநாத் ‘புல்டோசர் பாபா’ என்ற புனைப்பெயரைப் பெற்றார். உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலின்போது புல்டோசர்கள் பா.ஜக.வின் சின்னமான தாமரையைப் போலவே பிரபலமடைந்தன. தற்போது அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்திலும் புல்டோசர் மீதான காதல் பரவி வருகிறது.  மத்தியப் பிரதேச மாநிலம் ரைசன் நகரில் நடந்த வன்முறைக்குப் பிறகு, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் உத்தரவையடுத்து, உள்ளூர் மாவட்ட நிர்வாகம் குற்றவாளிகளின் சட்டவிரோத வீடுகள் மற்றும் கடைகளை இடித்துத்தள்ளியது. குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில், 13 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படி அதிரடி நடவடிக்கை எடுத்து வருவதால் சிவராஜ் சிங் சௌஹானை அங்குள்ள மக்கள் செல்லமாக ‘புல்டோசர் மாமா’  என அழைத்து வருகின்றனர்.