குஜராத்தில் பிரிக்ஸ் வங்கி

பிரேசில், ரஷ்யா, பாரதம், சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ள பிரிக்ஸ் அமைப்பின், புதிய வளர்ச்சி வங்கி 2015ல் துவக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம், சீனாவின் ஷாங்காய் நகரில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மண்டல அலுவலகத்தை, குஜராத் மாநிலத்தில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத் தலைநகர் காந்திநகர் அருகே அமைக்கப்பட்டு வரும் ‘கிப்ட்’ நகரம் எனப்படும் குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தில் இந்த அலுவலகம் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.