உத்தரப் பிரதேச மாநிலத்தில் அலிகார் மாவட்டத்தில் உள்ள ஹிந்து கோயிலில் சிலைகளை சேதப்படுத்தியதற்காக முகமது ஆசாத் என்ற முஸ்லிம் இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். கிடைத்த தகவல்களின்படி, ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளின் இடைப்பட்ட இரவில் இந்த சம்பவம் நடந்தது. தானா பன்னாதேவியின் ரசால்கஞ்ச் புறக்காவல் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள பழமையான சிவன் கோயிலில் முகமது ஆசாத் நள்ளிரவில் நுழைந்தார். ஒரு சுத்தியலால் அங்குள்ள சாமி சிலைகளை சேதப்படுத்தினார். சம்பவம் குறித்து அறிந்த மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். பா.ஜ.க தலைவரும், முன்னாள் மேயருமான சகுந்தலா பாரதியும் சம்பவ இடத்துக்கு வந்தார். விசாரணையையடுத்து முகமது ஆசாத் கைது செய்யப்பட்டார். உடைக்கப்பட்ட சிலைகளைத் தவிர கோயிலில் ஒரு சிலை காணாமல் பொயுள்ளது. எனவே, இந்த சம்பவத்தில் மேலும் சில முஸ்லிம் நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என பொதுமக்கள் கூறினர்.