முருகன் சிலை உடைப்பு

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பிரசித்தி பெற்ற தோரணமலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கான நுழைவு வாயில் மாதாபுரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த நுழைவு வாயிலில் ஒரு முருகன் சிலையும் கோவில் உண்டியலும் நிறுவப்பட்டுள்ளது. அந்த முருகன் சிலை, சில மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரித்த காவல் துறையினர் அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் இரவு மதுபோதையில் முருகன் சிலையை உடைத்ததாக தெரிவித்துள்ளனர். அவரை கைது செய்துள்ளனர். ஆனால் அவர், இச்செயலை மது போதையில்தான் செய்தாரா அல்லது கிறிஸ்தவ மிஷனரிகளின் தூண்டுதலால் செய்தாரா என விசாரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில், கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸின் ‘இயேசு விடுவிக்கிறார்’ சர்ச் அங்கு இருப்பதால் தோரணமலை என்னும் பெயர் பலகையில் மாதாபுரம் என்று குறிப்பிட்டு அந்த ஊரையே மாதாபுரம் என்று மாற்றிவிட்ட சர்ச்சை ஏற்கனவே அங்குள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.