விநாயகர் சிலைகள் உடைப்பு

உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. கொரோனாவை காரணம் காட்டி தி.மு.க அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் வடசேரி ஜங்ஷனில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், சாலையோரத்தில் வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகள் செய்து விற்பனைக்காக வைத்துள்ளனர். அங்கு கடந்த செவ்வாய் இரவு சில மர்ம நபர்கள் அங்கு வந்து சிலைகளை அங்கு வைத்து விற்க பணம் கேட்டு தகராறு செய்தனர். பணம் கொடுக்காததால் இரும்பு கம்பிகளால் அவர்களை தாக்கியதோடு, விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளை உடைத்துவிட்டு சென்றனர். இதனை அறிந்த பா.ஜ.கவினர், இந்து முன்னணியினர், பல்வேறு ஹிந்து அமைப்பினர் அங்கு திரண்டனர். மர்ம நபர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இச்சம்பவம் மாமூல் தகறாரா அல்லது மதக்கலவரம் தூண்டும் முயற்சியா, விநாயகர் சதுர்த்தியை தடுக்க அரசியல் கட்சிகள் செய்த சதியா என பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.