பாரத ராணுவத்தின் உளவுத்துறை சமீபத்தில் பயங்கரவாதிகள் இடையேயான உரையாடலை இடைமறித்துக் கேட்டது. அப்போது பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள், காஷ்மீரில் உள்ள வெளிநாட்டு பயங்கரவாதிகளிடம் எவ்வளவு இளைஞர்களை தங்களது பயங்கரவாத இயக்கங்களுக்கு ஈர்க்க முடியுமோ அவ்வளவு பேரை ஈர்க்கவும், குறிப்பாக 14 முதலாக 18 வயது வரை உள்ளோரை அதிகமாக குறிவைத்து மூளைச்சலவை செய்து பயங்கரவாதிகளாக மாற்றவும் உத்தரவு பிறப்பித்துள்ளது தெரியவந்தது. ஒரு வெளிநாட்டு பயங்கரவாதி காஷ்மீருக்குள் ஊடுருவினால் குறைந்தபட்சம் நான்கு காஷ்மீர் இளைஞர்களை மூளைச்சலவை செய்து விடுகிறான் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.