‘தமிழக முதல்வரான ஸ்டாலின், தமிழகத்தின் பெரிய ஹிந்து கோயில்களுக்கான ஆலோசனைக் குழுவின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார் என்று செய்தித்தாள்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஹிந்து அறநிலையத்துறையின் சட்டம் 10வது பிரிவின்படி, பிறப்பால் ஹிந்துவாக இருப்பவரும், ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவரும், கடவுள் நம்பிக்கை கொண்டவரும் மட்டுமே ஹிந்து சமய அறநிலையத்துறையில் பொறுப்பேற்க முடியும். அப்படி இருக்கையில், ஸ்டாலின் தன்னை ஒரு நாத்திகர் மற்றும் ஹிந்து கடவுள்களின் மேல் நம்பிக்கை இல்லாதவராக பகிரங்கமாக அறிவித்தவர். எனவே, தகுதி இல்லாத ஒரு நபர் தலைமையில் இந்த குழு இருப்பது சட்டவிரோதமானது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக, முதலமைச்சர் பக்தர்களின் உணர்வுகளுக்கு செவிசாய்க்க வேண்டும். சட்டத்தை மதிக்க வேண்டும். ஆதரிக்க வேண்டும். எனவே முதல்வர் ஸ்டாலின் இந்த ஆலோசனைக் குழுவிற்குத் தலைமை தாங்குவதைத் தவிர்க்க வேண்டும்’ என முற்போக்கு பிராமண சங்கம் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்த கோரிக்கயை வலியுறுத்தி முதலமைச்சரின் தனிபிரிவுக்கும். தமிழக ஆளுநருக்கும் அந்த சங்கத்தின் சார்பில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது,