3 லட்சம் வேலைகளை உருவாக்கிய பி.எல்.ஐ திட்டம்

மத்திய அரசால், ரூ.1.97 லட்சம் கோடி மதிப்பில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பி.எல்.ஐ.) திட்டம், மூன்று துறைகளுடன் மார்ச் 2020ல் தொடங்கப்பட்டது. பின்னர் அது 11 துறைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டம் தற்போது வரை ரூ. 53,500 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளதுடன் 3 லட்சம் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. மத்திய அரசு இத்திட்டங்களுக்கு இதுவரை ரூ. 3,000 கோடி ஊக்கத்தொகையை வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை ரூ. 5 லட்சம் கோடி மதிப்பிலான உற்பத்திகள் நாட்டில் அதிகரித்து சாதனை புரிந்துள்ளது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் கூடுதல் செயலர் ராஜீவ் சிங் தாக்கூர் இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்துப் பேசுகையில், “பி.எல்.ஐ திட்டம் உற்பத்தியை ஊக்குவிக்க வழங்கப்படுகிறது. ஆனால் நிறுவனங்கள் முதலில் ஆலை மற்றும் இயந்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும். எனவே, முதலீடுகளுடன் ஒப்பிடுகையில் உண்மையான பி.எல்.ஐ வெளியேர்றம் குறைவாக உள்ளது, மேலும் முதலீடுகள் மற்றும் உற்பத்தி சுழற்சிகள் அவற்றின் முழு திறனை அடையும் போது அடுத்த சுமார் மூன்று ஆண்டுகளில் இத்திட்டம் அதன் உச்சத்தை எட்டும்” என்று கூறினார்.