நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை மக்களைப் பாதித்து வரும் சூழலில், கொரோனா நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ‘மியூகோர்மைகோசிஸ்’ எனப்படும் புதிய வகை கருப்புப் பூஞ்சை (Black Fungus) நோய் புதிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தற்போது மஹாராஷ்ட்டிராவில் அதிகரிகக்க துவங்கி இருப்பதால் கட்டுப்படுத்துவற்கான மருந்து உற்பத்தியைப் பெருக்க மத்திய அரசு துரரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு தரப்படும் ஸ்டீராய்டு மருந்துகளால் இந்த நோய் தூண்டப்படலாம். அவை நோய் எதிர்ப்புச்சக்தியை குறைத்து, நீரிழிவு நோயாளிகள், நீரிழிவு இல்லாத பிற கொரோனா நோயாளிகளின் ரத்த சர்க்கரையின் அளவை அதிகரித்து விடுகின்றன. நோய் எதிர்ப்புச்சக்தி குறைவதுதான் கொரோனா நோயாளிகளின் மியூகோர்மைகோசிஸ் பிரச்சினைக்கு காரணமாக இருக்கலாம். கண்களைச் சுற்றி வலி அல்லது சிவத்தல், காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சுத் திணறல், இரத்த வாந்தி மற்றும் மாற்றப்பட்ட மனநிலை ஆகியவை நோய்த்தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம்.’ என, மருத்துவர்கள் கூறுகின்றனர்.