கோவா உள்ளாட்சி அமைப்பிற்கான தேர்தலில், பனாஜி கார்ப்பரேஷனில், மொத்தமுள்ள ஆறு நகராட்சிகளில் கனகோனா, கர்ச்சோரெம், பிச்சோலிம், வால்போய், பெர்னெம் ஆகிய ஐந்து நகராட்சிகளில், 30ல் 25 இடங்களை கைப்பற்றி பா.ஜ.க வென்றுள்ளது. இது, நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.கவுக்கு இது மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது. பா.ஜ.கவை ஆதரித்த வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். பிரதமர் மோடி தனது டிவிட்டரில், “பாஜகவுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் கோவா மக்களுக்கு நன்றி. நடைபெற்ற நகராட்சித் தேர்தல்கள் 2021ன் முடிவுகள், வளர்ச்சிக்கான பணிகளை முன்னெடுத்த எங்கள் கட்சியின் உழைப்பை மக்கள் பாராட்டுவதையே காட்டுகின்றன. மக்களிடம் சென்று பிரச்சாரம் செய்து கடுமையாக உழைக்கும் பா.ஜ.க தொண்டர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்” என்று நன்றி தெரிவித்துள்ளார்.