இலங்கையில் பா.ஜ.க துவக்கம்

இலங்கையில், ‘இலங்கை பாரதிய ஜனதா கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சி துவக்கப்பட்டுள்ளது. எங்களுக்கும் பாரதத்தில் உள்ள, பா.ஜ.கவுக்கும், எந்த தொடர்பும் இல்லை. பாரதம் போன்றே ஹிந்து தர்மத்தைக் காக்க பா.ஜ.க இலங்கையிலும் தேவைப்படுகிறது என்று அக்கட்சியின் தலைவர் வி.முத்துசாமி யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.