ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் கடந்த ஏப்ரல் 17, 18 தேதிகளில் அங்குள்ள 300 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் உட்பட மூன்று கோயில்களும், 86 கடைகளும் வீடுகளும் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மாநகராட்சியால் இடிக்கப்பட்டன. இது ராஜஸ்தான் உட்பட தேசமெங்கும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஸ்ரீராம நவமி மற்றும் ஸ்ரீ ஹனுமான் ஜெயந்தி யாத்திரைகளின்போது முஸ்லிம்கள் தேசமெங்கும் திட்டமிட்ட ரீதியில் வன்முறைகளில் ஈடுபட்டனர். வன்முறையில் ஈடுபட்ட முஸ்லிம்களின் சட்டவிரோத கட்டுமானங்கள் மட்டும் இடிக்கப்பட்டன. இதற்கு பழிதீர்க்கவே இந்த கோயில் இடிப்பை காங்கிரஸ் நட்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த கோயில் இடிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதற்கு அரசு பகிரங்க மன்னிப்புக் கேட்டு இடிக்கப்பட்ட கோயில்களை புனரமைத்துதரவேண்டும் எனக் கோரியும் இதற்கு காரணமான ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் பதவி விலகக் கோரியும் அல்வாரில் பா.ஜ.கவும் வி.ஹெச்.பி அமைப்பும் மாபெரும் பேரணி, போராட்டங்களை நடத்தின. பா.ஜ.க தலைவரும் அல்வார் தொகுதி எம்பியுமான மஹந்த் பாலக்நாத் தனது ஆதரவாளர்களுடன் ‘ஆகாஷ் பேரணியில்’ பங்கேற்றார்.